தைப்பூசம் திருநாள் அரசு பொது விடுமுறை : பெருமையுடன் நினைவு கூறுகிறேன் - ஈபிஎஸ்

 
ep

தைப்பூசம் திருநாளையொட்டி ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

 தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம்.  பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், வேல் எடுத்து வீர வழி காட்டிய தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், கந்தன் அருளால் எண்ணியது நிறைவேற, வெற்றி வசமாக, நன்மைகள் அனைத்தும் வந்து சேர,  முருகப்பெருமானை வழிபடுவதுடன், #தைப்பூசம் திருநாளை அரசு பொது விடுமுறையாக நமது கழக அரசு அறிவித்ததை இந்நன்னாளில் பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.