மோடியிடம் முக்கிய கடிதத்தை கொடுத்த ஈபிஎஸ்
Nov 19, 2025, 18:57 IST1763558822929
கோவை வந்த பிரதமர் மோடியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை வழங்கினார்.

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்றபோது தமிழ்நாட்டு நலன் சார்ந்த 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், கோவை, மதுரை மெட்ரோ திட்டம் பணி தொடக்கம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்த நிலையில், கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணியை விரைவில் தொடங்க வேண்டும். இயற்கை வேளாண் உள்ளீடுகளுக்கு அதிக சலுகை வழங்க வேண்டும், ஆர்கானிக் விளைபொருட்களை வாங்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மதுரை, கோவை மெட்ரோ திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரியும், பம்பு செட்டுக்கான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 5%ஆக குறைக்கவும் வலியுறுத்தினார்.

