நம்பிக்கை துரோகி என்ற பெயருக்கு பொருத்தமானவர் ஈபிஎஸ் - அண்ணாமலை சாடல்!!

 
annamalai

நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்குத் தான் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Annamalai

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்குத் தான். எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி பக்கத்தில் அமர வைத்தார்; ஆனால் அக்கரைக்கு இக்கரை பச்சை என நினைத்து பாஜகவை வேண்டாமென ஒதுக்கிய ஈபிஎஸ், நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்தார்அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி. 

EPS

இபிஎஸ் தலைமையில் எத்தனை தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்துள்ளது; எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஆனவரா?  அ.தி.மு.க., முன்பு இருந்ததைப் போல் இல்லை; மெல்ல மெல்லக் கரையத் தொடங்கிவிட்டது என்றார்.