இபிஎஸ் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம் வெளியீடு..! தென்மாவட்டங்கள் புறக்கணிப்பா?
வரும் ஏப்ரல் 02- ஆம் தேதி தருமபுரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை நிறைவுச் செய்கிறார்.
வரும் ஏப்ரல் 02- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு தருமபுரியிலும், மாலை 05.00 மணிக்கு கிருஷ்ணகிரியிலும்,
ஏப்ரல் 03- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியிலும், மாலை 05.00 மணிக்கு வேலூரிலும்,
ஏப்ரல் 04- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலும், மாலை 05.00 மணிக்கு விழுப்புரத்திலும்,
ஏப்ரல் 05- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு புதுச்சேரியிலும், மாலை 05.00 மணிக்கு கடலூரிலும்,
ஏப்ரல் 06- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு பெரம்பலூரிலும், மாலை 05.00 மணிக்கு உளுந்தூர்பேட்டையிலும்,
ஏப்ரல் 07- ஆம் தேதி சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 03.00 மணிக்கும், கெங்கவல்லியில் மாலை 05.00 மணிக்கும், ஆத்தூரில் இரவு 07.00 மணிக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஏப்ரல் 08, 09 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஏப்ரல் 10- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு காஞ்சிபுரத்திலும், மாலை 05.00 மணிக்கு திருவள்ளூரிலும்,
ஏப்ரல் 11- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 05.00 மணிக்கு திருவாரூரிலும்,
ஏப்ரல் 12- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு நாகப்பட்டினத்திலும், மாலை 05.00 மணிக்கு மயிலாடுதுறை, பூம்புகாரிலும்,
ஏப்ரல் 13- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு திருச்சியிலும், மாலை 05.00 மணிக்கு திண்டுக்கல்லிலும்,
ஏப்ரல் 14- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியிலும், மாலை 05.00 மணிக்கு மதுரையிலும்,
ஏப்ரல் 15- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு கரூரிலும், மாலை 05.00 மணிக்கு திருப்பூரிலும்,
ஏப்ரல் 16- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு கோவை மேட்டுப்பாளையத்திலும், மாலை 05.00 மணிக்கு ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்திலும்,
ஏப்ரல் 17- ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளிலும்,
ஏப்ரல் 18- ஆம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலும், மாலை 05.00 மணிக்கு ஈரோட்டிலும்,
ஏப்ரல் 19- ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
எனினும் ராமநாதபுரம், நெல்லை, தென்காசி போன்ற தென்மாவட்டங்களில் இந்த முறை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. தென்மாவட்டங்களில் சில தொகுதிகளில் அவருக்கு எதிர்ப்பு இருப்பதாலும் அங்கு பிரச்சாரம் மேற்கொள்வதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

