#EPS "நான் பல்ல காட்டுறேன்னு சொன்னியே நீ என்னப்பா காட்டுற"- எடப்பாடி பழனிச்சாமி பதிலடி

 
Eps
வரும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை அனைத்துக் கட்சியினரும் நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலான வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அனைத்து கட்சியின் முக்கிய தலைவர்களும் தமிழகம் எங்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, "நான் செங்கலைத் தான் காட்டுகிறேன், நீங்க என்னத்த காட்டுறீங்க பாருங்க என்று கூறி பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி சிரித்தபடி இருக்கும் போட்டோவை காட்டி " நான் கல்லைத்தான் காட்டுறேன் நீங்க பல்ல காமிக்கிறீங்க" என்று கிண்டலாக பேசினார்.
Udhay
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக தூத்துக்குடியில் நடைபெற்ற வரும் பொது கூட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, "நான் பல்ல காட்டுறேன்னு சொன்னியே நீ என்னப்பா காட்டுற" என்று கூறி பிரதமர் மோடியுடன் சிரித்தபடி இருக்கும் உதயநிதியின் போட்டோவை காண்பித்து பதிலடி கொடுத்தார்.