மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஈபிஎஸ் சாமி தரிசனம்!!

 
tn

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

tn

அதிமுக பொதுச்செயலாளரும்,  முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரைக்கு வருகை புரிந்துள்ளார்.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி கோயிலுக்கு சென்றார்.  அப்போது அவரை வரவேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்.

tn

 இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் , ராஜன் செல்லப்பா ஆகியோரும் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கு கோயிலை சுற்றி காண்பிக்க கனிமொழி எம்.பி. யும் அதே நேரத்தில் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.