மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை

 
d

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவது மற்றும் இளம் வாக்காளர்களை இணைத்தல் உள்ளிட்ட கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.