10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - ஈபிஎஸ் வாழ்த்து

 
ep

தமிழகத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

school

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில்  பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில்   91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில்  மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.



இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் , "தமிழ்நாட்டில் இன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் அனைவருக்கும் உங்கள் எதிர்காலம் சிறந்து புதிய உச்சங்களை தொட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், 

முதல் முயற்சியில் பெறுவது மட்டுமே வெற்றியல்ல,ஒருவேளை வெற்றியை தவற விட்டிருந்தாலும்  உங்கள் விடாமுயற்சியால் தேர்விலும் வாழ்விலும் புதிய வெற்றிகளை பெற்று வருங்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.