பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு இபிஎஸ் இரங்கல்

 
eps eps

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ள நிலையில் ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே  முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

Fire

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.


மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் உரிய நிவாரண தொகை உடனடியாக வழங்கும்படி, இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துவதுடன். நான் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியபடி தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.