சத்தியமூர்த்தி தேவர் மறைவு - ஈபிஎஸ் இரங்கல்!

 
ep

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனின் சகோதரர் சத்தியமூர்த்தி தேவர் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், எடப்பாடி பழனிசாமி  இரங்கல் தெரிவித்துள்ளார். 

EPS

இதுத்தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தனது சமூகவலைத்தள பக்கத்தில், போற்றுதலுக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் மைத்துனர் தெய்வத்திரு தங்கவேல் தேவர் அவர்களுடைய மகனும், பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் திருமதி காந்தி மீனாள் அவர்களுடைய இளைய சகோதரருமான திரு. த. சத்தியமூர்த்தி அவர்கள் வயது முதிர்வால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.


பாசமிகு சகோதரரை இழந்து மிகுந்த துயரத்தில் வாடும் திருமதி காந்தி மீனாள் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திரு. சத்தியமூர்த்தி அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.