எம்ஜிஆர் குறித்த பேச்சு - ஆ.ராசாவுக்கு ஈபிஎஸ் கண்டனம்!!

 
tn

நீலகிரி எம்.பி., ராசா,  நான் எம்ஜிஆரை மதிக்கிறதே இல்லை. ஒரு வெள்ளைக்காரன் வெளியில் இருந்து வந்தவனுக்கு இந்த மண்ணின் மாண்பை மதிக்கக் கூடிய பேராண்மை இருந்தது  என்று கூறியதுடன் எம்ஜிஆர் குறித்து தரக்குறைவாக கூறியுள்ளார்.

a

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , எம்ஜிஆர் குறித்த திமுக எம்.பி. ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடுவதுதான் ஆ.ராசாவின் வாடிக்கை.

eps

பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும் , அதிமுக என்றும் தரம் தாழாது. எங்கள் இதயதெய்வங்களை பிம்பச் சிறையிட திமுக மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.