தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு..! வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

 
tn

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

tn

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்தார். ஈபிஎஸ் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்காததால், அவர் மீது அவதூறு வழக்கினை பதிவு செய்தார் தயாநிதி மாறன். இந்த சூழலில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.

eps

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ம் தேதி தேர்தல் பிரசார கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதை எதிர்த்து தயாநிதிமாறன் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.