எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் ஈபிஎஸ்

 
tn


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் மத்திய சென்னையில்  தயாநிதி மாறன் போட்டியிட்டுள்ளார்.  இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்தார்.

dhayanithi maran

ஈபிஎஸ் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்காததால், அவர் மீது அவதூறு வழக்கினை பதிவு செய்தார் தயாநிதி மாறன். 

ep

இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.  தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்பாக ஈபிஎஸ் விமர்சித்ததை எதிர்த்து தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.  உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பழனிசாமி பேசியது உண்மைக்கு புறம்பானது; எந்த ஆதாரங்களும் இல்லாமல் என்மீது அவதூறு பரப்பி உள்ளார் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.