இபிஎஸ் ஆலோசனை கூட்டம்- தங்கமணி பங்கேற்கவில்லை

 
thangamani

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார்  முன்னாள் அமைச்சர் தங்கமணி.


சென்னையில் நாமக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்கவில்லை. அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்தபோது வேலுமனி அணியில் இருந்த தங்கமணியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு மீண்டும் வழங்கப்படாத அதிருப்தியால் கூட்டத்தை அவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.