2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை - ஈபிஎஸ்

 
e

2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என ஈபிஎஸ் கூறியுள்ளார்.


2024 மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் எடப்பாடி  பழனிசாமி அவர்கள், கிளை, வார்டு, வட்டம் தொடங்கி மாவட்டக் கழகம் வரை கழகப் பணிகள் மற்றும் எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என ஈபிஎஸ் கூட்டடத்தில் கூறியுள்ளார். சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கவில்லை. கூட்டணி அமைப்பதை தலைமை பார்த்துக் கொள்ளும், தேர்தல் வெற்றிக்கு பணியாற்றுங்கள். எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறதோ அங்கே எல்லாம் சரி செய்யுங்கள். நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 2026 சட்ட்மன்றத் தேர்தலுக்கு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.