உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு மே 03-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - இ.பி.எஃப்.ஓ அறிவிப்பு

 
அரிய வாய்ப்பு..  ரூ. 47,000 சம்பளத்தில் EPFO நிறுவனத்தில் வேலை..

உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு மே 3-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவித்துள்ளது. 

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதிக்கு முன் ஓய்வு பெற்று, பத்தி 11 (3) -ன் கீழ் விருப்பத்தை சமர்ப்பித்திருந்த ஓய்வூதியர்கள் உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்கள் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழிமுறைகள் கடந்த டிசம்பர் 29-ந் தேதி மற்றும் கடந்த ஜனவரி 5-ந் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி கள அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதிக்கு முன் ஓய்வு பெற்று, ஓய்வுக்கு முந்தையதாக கூட்டு விருப்பத்தை சமர்ப்பித்த ஓய்வூதியர்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இ.பி.எப்.ஓ.) இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடந்த 3-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அறங்காவலர் குழு தலைவர், அத்தகைய ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பத்தை பெற வருகிற மே 3-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.