நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழப்பு

 
s

உத்தரப் பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.


உத்தரப் பிரதேசத்தின் நக்லா ஸ்ரீ பதம் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்கள் வீட்டில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35) மற்றும் அவர்களது குழந்தைகள் (முறையே 11, 7 மற்றும் 3 வயதுடையவர்கள்) ஆகியோர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டனர். முந்தைய இரவு இந்தக் குடும்பத்தினர் நூடுல்ஸ் சாப்பிட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


உணவு நஞ்சானதால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. இருப்பினும் இதற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக  காவல்துறையினர் கூறுகின்றனர்.