பிரைட் ரைஸ் சாப்பிட்ட பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு

 
பிரைட் ரைஸ்

புதுச்சேரி வில்லியனுார் அருகே பிரைட்ரைஸ் சாப்பிட்ட பொறியியல் பட்டதாரி படுக்கையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil) இவருடைய ரெசிபி Sahana D- குக்பேட்

புதுச்சேரி வில்லியனுார் அருகே உள்ள ஆரியப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(33). இவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தார். கொரோனாவிற்கு பிறகு வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது மனைவி சுகந்தியுடன் புதுச்சேரிக்கு வந்த சத்தியமூர்த்தி,  பின்பு ஓட்டலில் பிரைட் ரைஸ்  வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்துள்ளனர். 

அதனை சாப்பிட்டு வழக்கம்போல் இரவு படுத்துள்ளனர். மனைவி எழுந்து விடியற் காலையில் கணவரை எழுப்பியபோது, அவர் மூச்சுபேச்சு இல்லாமல் படுத்த படுக்கையாகவே இருந்ததால் சந்தேகமடைந்து தட்டி எழுப்பி கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து சத்தியமூர்த்தியை மீட்டு வில்லியனுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பணியில் இருந்த டாக்டர் உடலை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து செல்வராசு கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.