பொறியியல் படிப்புகள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 
engineering

தமிழ்நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள்,  3 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் ஒரு திருநங்கை உட்பட ஏழு லட்சத்து 72,000 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எதிர்கொண்டனர்.  இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வகளும் அடங்குவர்.அந்த வகையில்  தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.

college ttn

இந்நிலையில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்;

engineering

ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு 1500; எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினருக்கு 250 பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.