பொறியியல் படிப்பு - மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

 
tt

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் | தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

tt

பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடமும் , நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடமும் ,  நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாணவி ரவணி முதலிடமும் , கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 2ம் இடமமும் பிடித்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேருவோருக்கான கலந்தாய்வு முதல் 2 நாட்கள் நடைபெறும்; பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tt

10 பேர் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்; அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் 32,223 மாணவர்கள் பொறியியல் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர்.