பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

 
engineering counselling 2022 engineering counselling 2022

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் 14 வரை நடைபெறும் என பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

engineering

இதுதொடர்பாக பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ஆம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல் 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை www.tneaonline.org'ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணக்கர்கள் தங்களது பெயருக்கேதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேரடியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், சான்றிதழ் சரிபார்பிற்கான நாள் மற்றும் நேரம் மாணக்கர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். 

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் விளையாட்டு வீரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் 2 நகல்களுடன் தேவையான படிவங்களையும் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணக்கர்கள் மட்டும் நேரில் வரவேண்டும் மற்ற மாணக்கர்களின் சான்றிதழ் சரிபார்பு இனையதளம் வாயிலாகவே நடைபெறும்,. விளையாட்டு வீரர்களுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.