செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

 
senthil balaji

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலக்க துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர்  செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.  இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்படிசெந்தில் பாலாஜி ஜாமின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு = விசாரணைக்கு வந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுsenthil balaji tn assemblyஇந்நிலையில் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் ,நண்பர்கள், தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது .சென்னை ,கோவை, கரூர் ,நாமக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை என தகவல் வெளியாகி உள்ளது.