10 மணிநேரமாக கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

 
ச்

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய சகோதரஎ மறைந்த  ராமஜெயம் இல்லங்களில் பத்து மணி நேரம் நடைபெற்ற அமலாக்க துறையினர் சோதனை நிறைவடைந்தது.


திமுகவின் முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு திருச்சி தில்லைநகர் 5 வது கிராஸில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் காலை முதல் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த நிறுவனத்தில் கே என் நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு முக்கிய பொறுப்பில் உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் தில்லைநகரில் உள்ள கே என் நேருவின் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தில்லை நகர் பத்தாவது கிராஸில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் மறைந்த ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்க துறையினர் சோதனைகள் ஈடுபட்டனர். திமுகவின் முக்கிய நிர்வாகியாகவும் மூத்த அமைச்சராகவும் இருக்கக்கூடியவர் கே என் நேரு அவருடைய வீட்டிலும் அவருடைய சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை செய்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இரண்டு இடங்களிலும் தலா ஆறு அதிகாரிகளை கொண்ட இரண்டு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை ஐந்து முப்பது மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. 10 மணி நேரம் நடந்த சோதனையில் அமைச்சர் கே என் நேருவின் குடும்பத்திற்கு சொந்தமான  வங்கி கணக்கு விவரங்கள் சொத்து விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. சோதனை காரணமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் மற்றும் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.