திமுக எம்பி கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை

 
கதிர் ஆனந்த் கதிர் ஆனந்த்

திமுக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. 

ச்

காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திற்கு சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் கடந்த (03.01.2025) முதல் காலை முதல் (05.01.2025) நள்ளிரவு 02:30 மணிவரை மூன்றாவது நாளாக தொடர்ந்து 44 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றது. இதில் மொத்தம் எட்டு கார்களில் வந்திருந்த 18 அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டனர். 

ஏற்கனவே கடந்த 3- ம் தேதி இரவு SBI வங்கி வாகனத்தோடு துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு வங்கி ஊழியவர்கள் வரவழைக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் வெளியே சென்றது. அதில் கணக்கில் வராதா ரொக்கப்பணம் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாகவும் அது அமலாக்கத்துறை கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் கல்லூரி தொடர்பான முக்கிய ஆவணங்கள்,  கணிணியின் ஹார்ட் டிஸ்க்கள், வாங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன. இச்சோதனையின் போது கல்லூரியின் அனைத்து சிசிடிவி கேமிராக்காளையும் அமலாக்கத்துறையினர் காட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பணம் கல்லூரியில் இம்மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் போட இருந்ததாகவும், மாணவர்கள் பல்வேறு வகையில் செலுத்திய கட்டணம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக எம்.பி கதிர்ஆனந்தின் தந்தையும், அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செலாளருமான துரைமுருகன் கடந்த 4 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற சுமார் நான்கரை மணி நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டு கல்லூரியில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றனர்.

டெல்லியில் இருந்து மீண்டும் அமைச்சர் துரைமுருகன் சென்னை வந்த பொழுது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் சென்றதற்கும் அமலாக்கத்துறை சோதனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறியிருந்தார். இதனை அடுத்து அவர் கூறிய இரண்டு நாட்களில் மீண்டும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று  அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்பொழுது கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் விடுபட்ட இடங்களில் இடங்களில் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்