தலைமுடியில் புரளும் கோடிக்கணக்கான ரூபாய்! சட்டவிரோத பரிமாற்றத்தை மோப்பம் பிடித்த அமலாக்கத்துறை
கோயில்களில் வேண்டுதலுக்கு தலைமுடியை காணிக்கையாக கொடுக்கும் வழக்கம், தென்னிந்திய மாநிலஙகளில் பின்பற்றப்படுகிறது. திருப்பதி, பழனி, திருத்தணி, வேளாங்கண்ணி போன்ற பிரபலமான வழிபாட்டு தலங்களில் காணிக்கையாக கொடுக்கும் தலைமுடிகளை மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
உலகளவில் விக், ஹேர் எக்ஸ்டென்சன் (hair extension)உள்ளிட்டவற்றுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில், விக் மற்றும் எக்ஸ்டென்சன்கள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் மனித தலைமுடியில் 85% இந்தியாவில் இருந்து தான் செல்வதாக கூறப்படுகிறது.ஒரு பக்கம் இந்த தொழிலில் சட்ட விரோதமாக தலைமுடிகளை வெளிநாடுகளுக்கு கடத்துவடுவதாகவும், அதன்மூலம் கோடி கணக்கில் சட்டவிரோதம் பணப்பெரி மாற்றம் நடப்பதாகவும் அமலாக்கதுறை கண்டுபிடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வடக்கு பதிவு செய்தது. அவ்வாறு தலைமுடிகள் சட்டவிரோதமாக கண்டைனர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, மியான்மர் வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் வழியாக இவை சீனாவை சென்று அடைகின்றன. இதற்கு கவுகாத்தி ஒரு மையமாக செயல்படுகிறது. பின்னர் சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் இந்த முடியை பயன்படுத்தி விக் தயாரித்து பெரிய நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. அவை தங்கள பிராண்டுகளின் பெயரில் அவற்றை விற்பனை செய்து லாபம் பார்க்கின்றன.
பிரபலமான வழிபாட்டு தலங்களில் இருந்து நாம் காணிக்கையாக வழங்கப்படும் முடி மிகப்பெரிய கண்டெய்னர்கள் மூலம் ஹைதாராபாத், பீகார் மற்றும் நேபாளம் வழியாக மியான்மருக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சட்டப்படி மனிதர்களின் தலைமுடியை ஒரு கிலோவிற்கு 65 டாலர்கள் வரை விற்பனை செய்யலாம் என அனுமதி தந்திருக்கிறது. ஆனால், கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்கள் ஒரு கிலோவை 100 டாலர்களுக்கு வாங்குகிறார்கள். எனவே இதற்கென ஒரு நெட்வொர்க்கே இயங்குவதாக கூறப்படுகிறது. கோயில்களில் இருந்து இவற்றை சேகரிக்கும் நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் பெயரில் வட மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். கவுகாத்தி மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட நிலையில் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தலை முடிகளை மொத்தமாக வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தொடர்புடைய இடத்தில் கௌஹாத்தி மண்டல அமலாக்கத்துறை இன்று சோதனையை நடத்தி வருகிறது.

ஓம் சக்தி முருகன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் சென்னை சூளைமேடு மேத்தா நகரில் தலைமுடி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் வெங்கடேசனின் அலுவலகம், கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள மற்றொரு நிறுவனம் மற்றும் வீடு, நெற்குன்றம் பகுதியில் உள்ள மற்றொரு அலுவலகம் என 4 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவரது நிறுவனம் மூலம் தலை முடி ஏற்றுமதியில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் நிலையில் அது தொடர்பான வங்கி பரிவர்த்தனை விபரங்கள் ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


