#BREAKING விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் புதன்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. நவம்பர் 6ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில், விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
2016 - 21 அதிமுக ஆட்சியில் ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் படி, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. சி. விஜயபாஸ்கர் அதிமுக அரசில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக (முக்கியமாக 2016–2021) பணியாற்றினார். மாநில ஊழல் தடுப்பு இயக்குநரகம் (DVAC) 2021-ல் அடிப்படை வழக்கைப் பதிவு செய்தது.. மே 2023-ல் அறியப்பட்ட வருமானத்துக்கு மீறிய சொத்துக்கள் குவித்ததாகக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகிறது.

