சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!
May 19, 2026, 10:24 IST1779166458889
வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பழைய கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் அயனாவரம், திருமங்கலம் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தல், சட்டவிரோத பண பரிவர்த்தை உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

