மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டையில், தனியார் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மதுபான ஆலையிலும், கரூர் ஒப்பந்ததாரர் வீடுகளிலும் இன்று காலை முதல் அமலாக்கத்துறையில்(ED) சொந்தமான இடங்களில் சோதனை செய்து வரும் நிலையில் விழுப்புரம் வழுதரெட்டியிலுள்ள எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான ஆலையில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 11 மணி முதல் மதுபானம் தயாரிக்கும் ஆலையில் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்திற்கு வழங்கிய மதுபான பாட்டில்கள் குறித்தும் எந்தெந்த மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்தும் துப்பாக்கி ஏந்திய துணை ரானுவ போலீசார் பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. கல்லாக்கோட்டையில் துணை ராணுவ படையோடு, 5 அதிகாரிகள் கடந்த 2 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்