#BREAKING லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
சென்னையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக துறை சோதனை நடத்தி வருகிறது.
தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. துணை ராணுவத்தின் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பலரின் திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. .அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரூ. 350 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது