செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கேட்டது!

 
tn

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தாமதமாக பதில்மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. வேண்டுமென்றே விசாரணையை தாமதப்படுத்துவதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டிய நிலையில் ஜாமீன் மனுவை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி கடந்த 10 மாதங்களாக மேலாக சிறையில் இருக்கிறார். இந்நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  பதில் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  அமலாக்கத்துறை  தரப்பில் நேற்று இரவு தான் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதனை குறிப்பிட்டு பேசிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அமலாக்கத்துறை வழக்கை வேண்டுமென்று தாமதப்படுத்த முயற்சிக்கு இருப்பதாக வாதம் முன் வைத்தார்.  பின்னர் காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கேட்டது . இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவை படிப்பதற்கு கால அவகாசம் தேவை என்று  கூறினர்.

senthil balaji

 அப்போது குறிப்பிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கொடுக்கல்,  வாங்கல் விஷயத்தை பணமோசடி என்று கட்டமைக்கிறது அமலாக்கத்துறை.  இந்த வழக்கில் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். வழக்கை உடனடியாக விசாரித்து செந்தில் பாலாஜிக்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.