"தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி!" – திருமழிசை மின்மயான விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் எக்ஸ் தளத்தில் அதிரடி விளக்கம்!

 
1

திருமழிசையில் உள்ள மின்மயானத்தில் மின்சாரம் இல்லாததால், சடலத்துடன் உறவினர்கள் காத்திருப்பதாக செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்து எக்ஸ் தளத்தில் அதிகாரி பேசும் வீடியோவுடன் பதிவு போட்டுள்ளார். அதில், 'தவறான தகவல். மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானத்தின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மயானத்தின் உட்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் ஊழியர் சரிசெய்ய தாமதமானது. ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, மின்வாரியக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர்.

உட்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் மின்வாரிய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.