கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பா? இனி சும்மா இருக்காதீங்க! அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு!

 
1

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது,

அனைத்து கோவில்களிலும் நேர்மையான, வெளிப்படையான, பொறுப்புமிக்க நிர்வாகம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். லஞ்சம், நிதி முறைகேடு, நிர்வாக அலட்சியம் உள்ளிட்ட எந்தவொரு தவறு கண்டறியப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் முயற்சிகள் எதுவும் அனுமதிக்கப்படக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, போலீசில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். முறைகேடுகளை தடுக்க தவறுதல், தகவல்களை மறைத்தல் அலட்சியமாக கருதப்படும்.

இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி, உடனடியாக துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.