மதுரையில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்ட்டர்

மதுரையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரி கொலை வழக்கில் தொடர்புடைய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22ஆம் தேதி கிளாமர் காளி படுகொலை செய்யப்பட்டார். ரவுடி காளீஸ்வரன் கொலையில் தேடப்பட்டு வந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.
போலீசாரை தாக்க முயன்றதில் காவலர்கள் கர்ணா சரவணன் ஆகியோர் காயமடைந்தனர். இதனை அடுத்து தற்காப்புக்காக தனிப்படை காவல் ஆய்வாளர் பூமிநாதன் சுட்டதில் மார்பு பகுதியில் காயம் அடைந்த சுபாஷ் சந்திரபோஸ் வேலம்மாள் மருத்துவமனையில் செல்லும் முன் இறந்தார். இதனைத் தொடர்ந்து சுபாஷ் சந்திர போஸின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல் ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் காவலர்கள் சரவணன் ,கர்ணா மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.