காலியான சென்னை... வெறிச்சோடிய சாலைகள்!

 
ச் ச்

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக செல்கின்றனர். சென்னை மாநகர் முதல் செங்கல்பட்டு வரை ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு ஒரகடம் வழியாக திருப்பி விடப்படுகிறது. 

தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து 18 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். கடந்த 2 நாட்களில் 7,500 அரசு பேருந்துகளில் இதுவரை 5 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். சொந்த வாகனம், ஆம்னி பேருந்துகளில் 17 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.