கால்நடை பராமரிப்புத் துறையில் கருணை அடிப்படையில் 23 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை!!

 
ttn

கால்நடை பராமரிப்பு துறையில் கருணை அடிப்படையில் 23 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு துறைகளில் காTamil Nadu Animal Husbandry Departmentலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  போக்குவரத்து துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

mk stalin

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்,  இளநிலை உதவியாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், பதிவறை எழுத்தர் ,அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

govt

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் இறையன்பு, கால்நடை பராமரிப்பு ,பால்வளம் ,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் , கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் ஞானசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.