எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு!

 
SBI வாடிக்கையாளர்களே உஷார்… அக்கவுண்டில் பணத்தை சுருட்டும் சீன ஹேக்கிங் கும்பல்!

பாரத் ஸ்டேட் வங்கியில் Junior Associates பதவிக்கு 8,424 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பட்டதாரிகள் https:/bank.sbi./careers/current-openings| என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

sbi

அதேபோல்  8,283 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும்  வெளியாகியுள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது இரண்டு பட்டப்படிப்புகள் (Integrated Dual Degree) சேர்த்து படித்த டிகிரி தேவை.  பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

jobs

இப்பணியிடங்களுக்கு முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும். டிசம்பர் 7ஆம் தேதி விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகும். முதல் நிலை தேர்வு ஜனவரி மாதமும், முதன்மை தேர்வு : பிப்ரவரி மாதத்திலும் நடத்தப்படும். இப்பணியிடங்களுக்கு https://sbi.co.in/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். General/ OBC/ EWS பிரிவினர்களுக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமும், SC/ ST/ PwBD/ ESM/DESM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .