மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு - 2,329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு!!
Apr 29, 2024, 10:48 IST1714367912411

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணிகளுக்கு நேரடித் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் (www.mhc.tn.gov.in). இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.05.2024