ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் சஸ்பெண்ட் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Aug 30, 2025, 10:14 IST1756529098701
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக்கூடாது, ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வதை தவிர்க்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கல் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்னரே நடவடிக்கையை முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாணையின்படி, குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்கள், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்த பிறகே பண பலன்களை பெற முடியும்.


