ஊழியர்கள் ஷாக்..! மெட்டாவின் அதிரடி முடிவு: 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

 
meta

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெட்டா நிறுவனத்தில் 78,865 பேர் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இத்துறையில் இந்தாண்டு மட்டும் 135 பில்லியன் அமெரிக்க டாலர் ( அதாவது இந்திய மதிப்பில் 12.72 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் ஆன செலவுக்கு சமமான தொகை. இதை ஈடு செய்யும் வகையில், மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் ( சுமார் 8 ஆயிரம் ) பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. 

மேலும் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பப்போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளது. அந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அமெரிக்காவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் ஆயிரக்கணக்கானோரை, தாமாக முன்வந்து பணியில் இருந்து விலகிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி உள்ளது. மே மாத துவக்கத்தில் 7 சதவீதம்( 8,750 பேர்) ஊழியர்கள் தாமாக முன்வந்து வேலையை ராஜினாமா செய்யும் வாய்ப்பை வழங்கி உள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.