டாஸ்மாக் கடையில் கூவி கூவி மது விற்ற ஊழியர்கள்: கோவில்பட்டியில் பரபரப்பான சம்பவம்!
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக, மது பிரியர்கள் புகார் தெரிவித்த நிலையில், தமிழகம் முழுதும் மது கடைகளில், கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற, 67 பணியாளர்களை அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்து, டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லெட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் செயல்படக்கூடிய டாஸ்மாக் கடையில் கூடுதல் MRP விலை கிடையாது... அனைத்து மதுபானங்களும் MRP விலை மற்றும் BUY BACK (பாட்டில் திரும்ப பெறுதல்) விலை ரூ. 10 மட்டும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. புகார்கள் தெரிவிக்கக்கூடிய whatsapp எண்ணுடன் குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மதுபானம் வாங்க வருபவர்களிடம் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கவில்லை, இனி பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை, MRP விலைக்கே விற்பனை செய்கிறோம் என்று கூறுவதுடன், சிலர் கூடுதலாக பணம் கொடுத்தாலும் அதை திருப்பிக் கொடுத்து விடுகின்றனர். இதுவரை பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கி வந்த நிலையில் தற்போதுMRP விலை கொடுத்தால் போதும் என்று ஊழியர்கள் சொல்லி சொல்லி மது விற்பனை செய்து வருவது மதிப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

