மதுரையில் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய ஊழியர்கள்

 
helicopter helicopter

மதுரையில் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Happy Video Of The Employees Who Celebrated Ayudha Puja For The Helicopter  In Madurai! | மதுரையில் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய ஊழியர்கள்  மகிழ்ச்சி வீடியோ !

ஏரோ டான் நிறுவனம் மற்றும் மை பிளை ஸ்கை நிறுவனம் மூலம் வரும் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு மதுரையை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இச்சேவையானது விமான நிலையம் பின்புறம் நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இருந்து இந்த வான்வழி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்த ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கர்நூலிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இதில் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து வான் வெளி ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் செல்ல 21ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ 6000  ரூபாய்  வசுசூலிக்கப்படுகிறது. ஒரு முறை ஆறு பேர் பயணம் செய்யும் சிறிய வகை ஹெலிகாப்டர் மூலம் மதுரை மற்றும் மதுரையில் சுற்றி சுற்றுப்புற பகுதிகளை 15 நிமிடங்கள் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஹெலிகாப்டருக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.