திருப்பதி உண்டியலில் இருந்த தங்க பிஸ்கட்டை திருடிச் செல்ல முயன்ற ஊழியர் கைது

 
ச்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது 100 கிராம் தங்க பிஸ்கட்டை திருடிச் செல்ல முயன்ற ஒப்பந்த ஊழியர் பென்சிலய்யா கைது செய்யப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தூண்டியலில் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் தினந்தோறும் மூன்று முதல் 5 கோடிக்கு மேல் காணிக்கையாகவும், தங்கம், வெள்ளியாகவும் செலுத்துகின்றனர். இந்த உண்டியல் கோயிலில் நிரம்பியதும் காணிக்கைகள் அவ்வப்போது பலத்த பாதுக்காப்பிற்கு மத்தியில்  கோயிலுக்கு வெளியே உள்ள பரக்காமணி (உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்திற்கு) கொண்டு சென்று எண்ணப்படும். அவ்வாறு  பரக்காமணியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டு கொண்டுருந்த நிலையில் அங்கு ஒப்பந்த ஊழியராக பணி புரியும் பென்சிலய்யா என்பவர் உண்டியல் கொண்டு செல்லும் ஒரு டிராலியில் 100 கிராம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்  மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளார். 

இதனை தேவஸ்தான  விஜிலன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக திருமலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்  வழக்குப் பதிவு செய்து இந்த திருட்டில் பென்சிலய்யா தனியாக ஈடுப்பட்டாரா அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.