பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348ஆம் ஆண்டு சதய விழா - ஈபிஎஸ் மரியாதை!!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348ஆம் ஆண்டு சதய விழா நாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படுபவரும், சங்ககாலத்தில் உதித்த சரித்திர நாயகரும், முத்தரையர் இனத்தின் குலதெய்வக் கடவுள்களில் ஒருவராக போற்றப்படுபவரும், முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்டவருமான பெரும்பாட்டன் பேரரசர் சுவரன்மாறன் முத்தரையர் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார்.திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய தமிழகத்தின் நிலப் பரப்பை வரலாறு போற்றும் வகையில் கி.பி. 705 முதல் கி.பி. 745 வரை ஆட்சி செய்தவரும், வரலாற்றில் முதன்மையானவருமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்டு, தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, காலத்திற்கும் நிலைபெறச் செய்து, பெரும் போர்களில் தோல்வியே காணாது, வரலாற்றில் தன் வாழ்நாளில் வாகை பூவை மட்டுமே சூடிய நிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு சதய விழா… pic.twitter.com/wKTCRowkOX
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 23, 2023

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்டு, தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, காலத்திற்கும் நிலைபெறச் செய்து, பெரும் போர்களில் தோல்வியே காணாது, வரலாற்றில் தன் வாழ்நாளில் வாகை பூவை மட்டுமே சூடிய நிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு சதய விழா நாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.