கொட்டி தீர்க்கும் கனமழை - அவசர உதவி எண்கள் அறிவிப்பு..!!
Oct 22, 2025, 10:42 IST1761109956710
கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு 04146-223265, 9498100485 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க 044- 27237107 மற்றும் 805621077 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த தகவல்களை அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. 044 - 2766 4177, 044 - 2766 6746 எண்களை தொடர்புக் கொண்டு மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது. 94443 17862, 94989 01077 என்ற வாட்ஸ் அப் எண்கள் மூலம் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது.
தஞ்சைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் 1077, 04362 230456 ஆகிய உதவி எண்களை அழைக்க அறிவுறுத்தல்.
¶ திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
044-27664177
044-27666746
9444317862
94989 01077
மயிலாடுதுறை மாவட்டம் வடகிழக்கு பருவமழை
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள்
04364-222588
7092255255


