WhatsApp-க்குப் போட்டியாக களமிறங்கிய எலான் மஸ்க்கின் XChat..!!

 
Q

XChat என்ற பிரத்தியேக மெசேஜிங் செயலியை எலான் மஸ்க்கின் X நிறுவனம் அறிமுகம் செய்தது.

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பவும், வீடியோ கால் சேவைக்காகவும் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், அச்செயலிக்கு போட்டியாக எலான் மஸ்கின் X நிறுவனம் XChat என்ற பிரத்யேக மெசேஜிங் செயலியை உருவாக்கியுள்ளது.

முதற்கட்டமாக ஆப்பிள் iOS சாதனங்களில் அறிமுகமாகியுள்ள இந்த செயலியில், End-to-end Encryption, Disappearing Messages, தடுப்பு, ஆடியோ/வீடியோ கால்கள், குரூப் சேட் வசதிகளும் உள்ளன.

மேலும், செல்போன் நம்பர் இல்லாமலே, X கணக்கு மூலமாக XChat-ல் லாகின் செய்யலாம் என கூறப்படுகிறது.மேலும், பயனர்கள் விளம்பரம் அற்ற அனுபவத்தை பெற முடியும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.