முன்னாள் அதிபர் டிரம்ப் மட்டுமில்லை என்னையும் கொலை செய்ய முயற்சி நடந்தது - எலான் மஸ்க்..!

 
1

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்தது. காதில் காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனாளர் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு விடுத்த கோரிக்கையில், ‛‛ தயவு செய்து உங்களது பாதுகாப்பை 3 மடங்கு அதிகரியுங்கள். டிரம்ப்பை நெருங்கி வந்தால், உங்களையும் கொலை செய்ய முயற்சிப்பர் ” எனக்கூறியிருந்தார்.

இதற்கு எலான் மஸ்க் அளித்த பதிலில்; ஆபத்தான நேரத்தைக் கடந்துள்ளேன். கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் என்னை வெவ்வேறு தருணங்களில் கொலை செய்ய முயற்சித்தனர். டெஸ்லா அலுவலகம் அருகே துப்பாக்கியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.