அரசு சேவைகளை எளிதாக்க "எளிமை ஆளுமை" திட்டம்- நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்
அரசு சேவைகளை எளிதாக்கும் வகையில் "எளிமை ஆளுமை" திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் எளிமை ஆளுமை திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசு செயல்பாடுகளைத் திறம்பட மேம்படுத்துவதோடு, குடிமக்களுக்குத் தேவையான சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்ட மூலம் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி உரிமம், மகளிர் இல்லங்களுக்கான உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், முதியோர் இல்லங்கள் உரிமம், நன்னடத்தை சான்றிதழ், அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் உள்ளிட்டவை பெற முடியும். அதேபோல், பொதுமக்கள் எளிதில் அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வகையில் இந்த திட்டம் சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


