சாலையில் சென்ற காரை தூக்கி வீசிய காட்டுயானை

 
கார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு அணையை செல்பி எடுக்க முயற்சி செய்த பொழுது காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலியான நிலையில் ஊருக்கு சுற்று திரிந்த காட்டு யானைகள், கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி என்பவர் அவரது மனைவியுடன் தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பாணிபட்டி என்ற இடத்தை கடக்கும்போது, காரை உரசி சென்றதுடன், காரின் முன்பகுதியை தூக்கி வீசியது. இதில் காரின் முன் சக்கரம் மற்றும் கார் சேதாரம் ஆனது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்து திருப்பதி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டு காட்டு யானைகளும் சப்பாணிப்பட்டி கிராமத்தில் இருக்கும் விவசாய நிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளது. இரண்டும் காட்டுக்கு செல்ல வழி தெரியாமல் திணறி வருகிறது. 

தொடர்ந்து வனத்துறையினர் கிராமத்தில் புகுந்த காட்டு யானையை காட்டுக்குள் அனுப்புவதற்காக வெடி சத்தங்களை எழுப்பி வருகின்றனர். கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். காட்டு யானைகள் மீண்டும்  காட்டுக்குள் சென்றடைய குறைந்தபட்சம் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை யானைகள் கடக்க வேண்டி இருக்கும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.