மின்சார திருட்டு - மின்வாரியம் எச்சரிக்கை
முறைகேடாக பியூஸ் கேரியர்களை இணைத்து மின்சாரத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மண்டலத்தில் சட்டவிரோத மின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், முறைகேடாக பியூஸ் கேரியர்களை இணைத்து மின்சாரத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது. மின் திருட்டில் ஈடுபடுவது கடுமையான குற்றம். சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்துவது மின்சார சட்டம் 2003ன் படி கடுமையான குற்றம். அவ்வாறு பயன்படுத்தினால் கூடுதல் வரி, அபராதம் விதிக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீட்டர்களில் இருந்து முறைகேடாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்த கூடாது என்றும் மின்வாரியம் கூறியுள்ளது.

