மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பி! சடலம் வைக்கப்பட்ட ப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து அக்கா பலி

 
அக்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அணியமங்கலம் கிராமத்தில் அடுத்தடுத்து தம்பி மற்றும் அக்கா பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அணியமங்கலம் கிராமத்தில் மின் துறையில் தற்காலிக பணியாளராக குருமூர்த்தி (42) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று மின்மாற்றில் பணியாற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அணியமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று கொண்டுவரப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.அப்போது குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் கசிவு காரணமாக குளிர்சாதனப் பெட்டியை பிடித்திருந்த ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக ஏழு பேரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவ மனைக்கு வரும் வழியில் சுந்தரி (50)என்பவர் உயிரிழந்தார்.நேற்று இறந்த குருமூர்த்தியின் சகோதரி சுந்தரி என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அபர்ணா, பாக்கியலட்சுமி, அகத்தியா, உமாராணி, துர்காதேவி ,ஜெயசுதா ஆகிய ஆறு நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக வலங்கைமான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.